காதல்

என் நாட்குறிப்பை
நான் அறியாமல்
ரகசியமாய் திறந்து
அவள் நினைவை
பத்திரமாக
எழுதி வைக்கும்
காதல்....

கொங்கு கவியன்

பூக்கள்

காலை முதல்
மாலை வரை
சிரித்தேன் ....
கிடைத்தது
மரண தண்டனை ....
---- உதிர்ந்து போன பூக்கள்

கொங்கு கவியன்

அவள் கொலுசு

இன்று
இசை கல்லூரி
விடுமுறை....

அவளின்
கால்
கொலுசு
தொலைந்ததால்!!!

அம்மா

எனக்கு காய்ச்சல்,
ஆனால்
நெருப்பாய் கொதிக்கும்
அவளின்
மனது....
அவள்
தான்

"அம்மா"

lawsuit advances