காதல் மலடி

ஒரு
காதல்கூட
பெற முடியாத
காதல் மலடி
என் கவிதைகள்..!!

உனக்கெழுதிய
கவிதைகளை
இன்று
ஊரே
காதலிக்கிறது..!!

நீ கடைசியாய்
அழ வைத்து சென்ற
பூங்கா இருக்கையில்..
இன்று
வேறு காதலர்கள் சிரித்தபடி...?!

என் இரவுகளை
நரகாக்க....
எங்கிருந்தோ....
எப்படியோ....
கண்ணில்பட வைத்துவிடுகிறாய்
பெண்ணொருத்தியை
உன் சாயலில்...!!

உனக்கு
சொர்க்கம்தான் சந்தேகமில்லாமல்...
நரகத்தைதான்....
இங்கே ஏற்படுத்தி வைத்திருக்கிறாயே...??!

ஒரு தலை காதல்...

நீ எந்த பெண்ணை
காதலித்தாலும்
கட்டி வைக்கிறேன்
என்கிறார்
அப்பா..,
எந்த பெண்ணை
கட்டி வைத்தாலும்
காதலிக்கிறேன் என்கிறேன்
நான்...,
இப்படியே
ஒளிந்து கிடக்கட்டும்
என் ஒரு தலை காதல்!

விக்கல்

விக்கல் வரும்போதேலம்
யாரோ நினைகிறார்கள் என்று
சொல்லுவதெல்லாம் பொய் ....
அது உண்மையாக இருந்தால்
"என் காதலி"
விக்கியே செத்திருப்பாள்....

நம்பிக்கையில் ......

எத்தனை முறை விழுந்தாலும்
கவலை இல்லை....
ஒருமுறையாவது
நீ வந்து தூக்கி விடுவாய்
என்ற ஒற்றை நம்பிக்கையில் ......

குடும்ப கட்டுப்பாடு

அனாதை
குழந்தைகள்
எல்லாம்
கடவுளின்
குழந்தைகள்
என்றால்
அவருக்கும்
செய்ய வேண்டும்
குடும்ப கட்டுப்பாடு...

lawsuit advances