கதிரவனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளுக்காக பகலில் நீ வெளிச்சம் தருவதால் !
சந்திரனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் முகம் போல் நீ இருப்பதால்!
மீன்களே,உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் விழி அழகின் முன் தோற்றதால்!
மான்களே,உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளை கண்டு மலைத்து உங்கள் ஓட்டம் நின்றதால்!
மலர்களே,உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் வாசனையை கேட்டு மன்றாடியதால்!
முயலே,உனக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் பருவச் செழிப்பின் துள்ளலை பார்த்து நீ வெட்கப்பட்டதால்!
தேனீக்களே,உனக்கும் என் இதயம் கனிந்த நன்றி,
தேன் எடுக்க என்னவளின் உதட்டை தேடியதால்!
