கவிதையே கிடைத்த பின் கவிதை எதற்கு...?

நீ
கண்ணில் பட்டாய்...
கவிதைக்கு
பிள்ளையார் சுழி....!!

நீ
என்னில் வந்தாய்..
கவிதை காகிதமாய்
விண்ணில் நான்...!!

தீ
முத்தம் பரிசளித்தாய் திரையரங்கில்...
டைரி பக்கங்கள்
கவிதைகளால் காலியானது..!!

நீ
கை பிடித்தாய் மனைவியாகி...
கவிதை பேனா மை
உறைந்தது மின் விசிறி காற்றில்..!!

ஏங்கிய
கவிதையே கிடைத்த பின்
கவிதை எதற்கு...?

என்னவளால் !!!

கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை

அனால் இன்று.....

நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது

என்னவளால் !!!

காதல்

பலரால்
செய்யப்படும்
தவம்....

சிலருக்கு
மட்டுமே
கிடைக்கும்
வரம்...

விடை தெரியாமல்

சிறிது தூரம்
நடக்கவே
சலித்து
கொண்டவன்
நான்....


இன்று,


வெகு தூரம்
நடக்கிறேன்
விடை
தெரியாமல்...


"அவள் பின்னால்"

இப்போதே கேட்டுவிடு

என் பின்னே சுற்றுவது ஏனென்று

இப்போதே கேட்டுவிடு...

தாமதிக்க தாமதிக்க

என்னிடம்

காரணங்கள் அதிகமாகிவிடக்கூடும்..

நம்பிக்கையோடு

இங்கிருந்து சென்று விடுங்கள்
என்று சொல்லி விட்டு
வேக வேகமாய்
நடந்து செல்கிறாய்..

நீ சென்று விடு என்று
சொன்ன இடத்தை விட்டு
அகல முடியாமல் நின்று கொண்டிருக்கிறது
என் இதயம்..

பொய்யை மறைக்க தெரியாமல்
திரும்பி பார்ப்பாய் என்ற
நம்பிக்கையோடு..

தாகம்.....

தெளிந்த
நீரில்
அவள்
முகம் !

எனக்கோ
உயிர் போகும்
தாகம் !

கை பட்டாள்
கலைந்துவிடும்
அவள் முகம் !

போகட்டும் உயிர்,
அவள் முகத்தை
பார்த்துகொண்டே ....

மருதாணி

பிடித்தவனை நினைத்து
மருதாணி வைத்தால்
நன்றாக சிவக்கும் என்றார்கள்...
நானும் வைத்தேன்.... ஆனால்
சிவக்கவில்லை.....
ஏன் என்று சிந்த்திக்கையில்
கண்கள் சிவந்தது....
பிறகுதான் உண்மை புரிந்தது....
அவன் மீது கொண்ட அன்பை...
இந்த மருதாணி சிவப்பில்
அடக்க முடியாதென்று....!!!!!

என் கண்கள்

அழ வைப்பது
அவள் தான்
என்று தெரிந்தும்
அடம் பிடிக்கிறது
என் கண்கள் ...!
அவளைத்தான்
காண வேண்டும்
என்று...

தோழியெனும் ஒரு தேவதைக்கு....

எப்படியிருப்பாய் நீ?

காலங்கள் பல கடந்து விட்டாலும்
என் நினைவுப் பெட்டகத்தில்
ஒரு பொக்கிஷமாய்
சேமித்து வைத்திருக்கிறேன் -
உன்னை!

என் சிறு வயது தோழிகளில்
நீ மட்டும் ஏனோ -
தொலைவானில் ஊறும் நிலவென
என்னில் தனித்து நின்று விட்டாய்..!

என் மனதில் அவ்வப்போது எழும்
உனைப் பற்றிய கேள்விகளுக்கு
விடையில்லாமல் -
என் கவிதைகளையே
பதில்களாக்கிக் கொள்கிறேன்!

ஆனாலும் -
எண்ணத் தூரிகையால்
உன் முகம் வரைந்து
என் கற்பனை சுவர்களெங்கும்
ஒட்டி வைக்கிறேன்!

புன்னகை மட்டுமே
அணிந்திருக்கும்
உன் பனியிதழ்களில் -
இப்போது லிப்ஸ்டிக்கின்
பூச்சிருக்குமா?

இளமையும் காலமும் இணைந்து -
மெல்லிய உன் தேகத்தில்
புதுக் கவிதைகள் எழுதியிருக்குமா?

பால் வடிந்த உன்
முக நிலவில் - பருக்களின்
அடையாளங்களிருக்குமா?

கள்ளமில்லாமல் பார்க்கும்
உன் பளிங்கு விழிகள்தான்
சாகசக் கலைகளில்
தேர்ந்திருக்குமா?

காதல் களவாடல்களில்
பறிபோயிருக்குமோ -
ஒருவேளை
உன் இதயமும் ?

இல்லை -
களங்கமில்லா நிலவென
இன்னமும் 'நீ' - நீயாகவே
இருக்கிறாயா?

வழக்கம் போலவே -
இக்கேள்விகளுக்கும்
என்னிடம் விடையில்லை,
ஏனெனில் -
என்னருகில் நீயில்லை!

பிரிவின் வலிகளும்
வேதனைகளும் உள்ளிருந்து
எனை எரித்தாலும்

காலத்தை வென்று நிற்கும்
உன்னுடனான என்
நட்பை எண்ணி சற்றே
கர்வம் கொள்கின்றேன்..!

பிரிந்த நம் தடங்கள்
எப்போதாவது
ஒன்றிணையும்போது -

உன் வாய் மலர்ந்து ஏதும்
விளம்பாவிட்டாலும்
நம் சிநேகிதத்தின் அடையாளமாய்
ஒரு பார்வையோ...
சிறு புன்னகையோ...
மறவாமல் என் மீது
வீசியெறிந்து விட்டுப் போ -

வாழ்ந்து விட்டுப் போகட்டும் -
நான் கொண்ட கர்வமும்,
உன்னதமான நம் நட்பும்.

பொம்மை

நீ
விரும்பும்
விளையாட்டு
பொம்மை
என்பதால்
பத்திரமாக
வைத்திருக்கிறேன்
என்னை...

எப்படி சொல்வேன்???

புரியாத காரணங்கள் சொல்லி
எனை பிரியா வழி தேடி கொண்டாள் !

ஊர் சிரித்தது
நான் காதலில் தோற்றவனாம் ....

எப்படி சொல்வேன் நான் ???
அவள் என்னை
காதலிப்பதில் தோற்றவள் என்று....

கவிதையாய்

கடிதம் எழுத
நேரம்
இல்லை என்றல்,
உன்
கைவிரல் தொட்ட
காகிதத்தை அனுப்பு
என் கண்களுக்கு
அது போதும்
உன்
கை ரேகை மட்டும்
" கவிதையாய் "

என் காதலியாக...

என்
குழந்தை
தனியாக
நடக்க
பழகி விட்டது...
அனால்
அவள்
இன்னும்
என்
விரல் பிடித்து தான்
நடக்கிறாள்
என் காதலியாக...

lawsuit advances